தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
கன்னிவாடி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது, ரூ.5 லட்சம் மதிப்புள்ள 5,800 லாட்டரி சீட்டுகள் பறிமுதல்;
திண்டுக்கல் கன்னிவாடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கன்னிவாடி பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தெத்துப்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட அசாம், கேரளா, பூட்டான் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ஹரிகிருஷ்ணன்(46) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள அசாம், கேரளா, பூட்டான் லாட்டரி சீட்டுகள் 5,800, பணம் ரூ.1,700 ஆகியவற்றை பறிமுதல் செய்து கன்னிவாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்படி சம்பவம் குறித்து கன்னிவாடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிராஜுதீன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.