விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

மதுரை மாவட்டம் பாரப்பட்டி அருகே இளங்குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது;

Update: 2025-06-23 12:15 GMT
மதுரை மாவட்டம் பாரப்பத்தி தெற்கு தெருவை சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் வைரலட்சுமி (21) என்பவர் டிப்ளமோ நர்சிங் படிப்பு படித்துவிட்டு விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வருடமாக பணியாற்றி வந்தார். இவர் தனது உறவினர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த காதலன் கடந்த மே மாதம் 5ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் வைரலட்சுமி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி வீட்டில் விஷம் சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (ஜூன் .21) இரவு 10 மணியளவில் உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை ஆறுமுகம் நேற்று கூட கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News