ஆரணியில் தமிழக அரசை கண்டித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்.

ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் தோசை சுடும் நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர்.;

Update: 2025-06-23 18:15 GMT
ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் தோசை சுடும் நூதன ஆர்ப்பாட்டம் செய்தனர். தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின்கீழ் 100 நாள் வேலைக்கான கூலி மத்திய அரசு ஒரு நபருக்கு 319 வழங்குகிறது ஆனால் மாநில அரசோ அதிலிருந்து ஒரு நபருக்கு ரூ.70 மட்டுமே வழங்குகிறது. மேலும் 100 நாட்கள் வேலையில் 60 நாட்கள் மட்டுமே வேலை வழங்கி மீதி 40 நாட்கள் வேலை தராமல் பணம் எடுத்து விடுகின்றன எனவும் ஆகையால் இதனை கண்டித்து ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து. தமிழக அரசை கண்டித்து தோசை சுடும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திமுக அரசு நூறு நாள் பணியை முடக்குவதை மறைப்பதற்காகவும் நகராட்சியுடன் சில ஊராட்சிகளை இணைப்பதை மறைப்பதற்காகவும் போராட்டங்கள் நடத்தி மக்களை ஏமாற்ற நினைக்கிறது என்று மாவட்ட தலைவர் வாக்கடை புருஷோத்தமன் பேசி தோசை சுடும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதில் விவசாயிகள் வேலப்பாடி பெருமாள், வளையாம்பட்டு சம்பத், வடுகசாத்து தாமோதரன், வேலப்பாடி குப்பன், அய்யம்பாளையம் சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News