விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
சாணார்பட்டி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது;
திண்டுக்கல் சாணார்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புறநகர் DSP.சிபிசாய் சௌந்தர்யன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பொன் குணசேகரன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கொசவபட்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் விற்பனைக்காக 1/2 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது உடனடியாக போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர் கொசவபட்டி மார்க்கெட் தெரு பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் சதீஷ்குமார்(27) என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.