சிறுதானிய உணவுப் பொருள்கள் கண்காட்சி
மதுரை அலங்காநல்லூரில் சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது;
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதி மகளிருக்கு சாஜர் தொண்டு நிறுவனம் மற்றும் பென்னர் கம்பெனியுடன் இணைந்து சிறுதானிய மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் மூலம் சுவையான உணவு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி கடந்த ஒரு மாதமாக வழங்கப்பட்டு வந்தது. இதன் நிறைவு விழா மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (ஜூன்.24) நடைபெற்றது. இங்கு விற்பனைக்கும் தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.