நாசரேத்தில் அபிஷேக பெருவிழா: உலக நன்மைக்காக பிராத்தனை
நாசரேத்தில் காமா ஜெபக்குழு வெள்ளி விழாவை முன்னிட்டு நடந்த அபிஷேகப் பெருவிழாவில் திரளானோர் பங்கேற்றனர்.;
நாசரேத்தில் காமா ஜெபக்குழு வெள்ளி விழாவை முன்னிட்டு நடந்த அபிஷேகப் பெருவிழாவில் திரளானோர் பங்கேற்றனர். தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் காமா ஜெபக் குழுவின் 25வது வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு அபிஷேகப் பெருவிழா கடந்த 20 ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. தூய யோவான் பேராலய உதவிகுரு தனசேகர் ராஜா ஜெபித்து விழாவை தொடங்கி வைத்தார்.. காமா ஜெபக்குழு தலைவர் பில்லி கிரஹாம் வரவேற்றார். ஸ்தாபகர் குருவானவர் சாமுவேல் முன்னிலை வகித்தார். பவுளி திலக் சாமுவேல் தலைமையில் காமா பாடகர் குழுவினர் பாடல்கள் பாடினர். திருச்சி அன்பரின் ஊழியத்தின் ஊழியர்கள் டாக்டர் ஆனந்த ஸ்திரா, டாக்டர் ஜேன் ஜாஷ்வா ஆகியோர் கலந்து கொண்டு அபிஷேக செய்தி கொடுத்தனர். இதில் நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் அனைத்து ஊர்களுக்கும் திரும்பிச்செல்ல வாகன வசதி செய்யப்பட்டு இருந்தது. தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் நிறைவு ஜெபம் செய்தார். ஏற்பாடுகளை நாசரேத் காமா ஜெபக்குழு ஸ்தாபகர் குருவானவர் சாமுவேல் தலைமையில் தலைவர் பில்லிகிரஹாம், உப தலைவர் மர்காஷிஸ் மோசஸ், செயலாளர் ஜெபின், இணைச்செயலாளர்கள் லவ்சன், ஜெபக்குமார், பொருளாளர் மேஷாக், பாடகர் குழு தலைவர் ஜோயல், கெளரவ ஆலோசகர் நெய்ல்சன், செயற்குழு செயலர் செல்வின், இணை ஒருங்கிணைப்பாளர்கள் குரூஸ் மாசில்லாமணி, ஜெஸ்வின் பிரான்சிஸ், கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஞானராஜ், ஜோசப் பர்னபாஸ், தினகரன் ஜோசப், கன்வீனர்கள் விமல் சுதாகர், ஜாண்சன் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.