இருசக்கர வாகனம் திருட்டு - இரு சிறுவர்கள் கைது

காவல் நிலையத்தில் இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்;

Update: 2025-06-25 05:25 GMT
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனம் திருடிய வழக்கில் இரு சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா். திருப்புவனம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த இருசக்கர வாகனத்தை இருவா் அண்மையில் திருடிச் சென்றனா். இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், மதுரை மாவட்டம், அங்காடிமங்கலத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன், திருப்புவனம் நாடாா் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் இருவரும் இருசக்கர வாகனத்தைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இரு சிறுவா்களையும் கைது செய்து இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

Similar News