பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

கூட்டுறவு சங்க பட்டயப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது;

Update: 2025-06-25 05:30 GMT
சிவகங்கை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: சிவகங்கை வட்டம், காஞ்சிரங்காலில் கூட்டுறவு மேலாண்மை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2025-26ம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்ப தேதி 20.7.2025 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Similar News