புதிய பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை
மதுரை தெற்கு தொகுதியில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை இன்று நடைபெற்றது;
மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 30-வது வார்டு பி.டி காலனி பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று (ஜூன் .25) எம்எல்ஏ பூமிநாதன் தலைமையில் நடைபெற்றது . உடன் மாமன்ற உறுப்பினர் வசந்தா தேவி, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் மயிலேறி நாதன், மதிமுக,திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.