பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் முற்றுகை போராட்டம்

மதுரை உசிலம்பட்டி அருகே பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் போக்குவரத்து பணிமனை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.;

Update: 2025-06-25 10:08 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள துரைசாமிபுரம் புதூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பாப்பாபட்டி உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பயின்று வருகின்றனர்.இந்த கிராம மக்களும் உசிலம்பட்டிக்கு வந்து செல்ல வசதியாக கிராமத்திற்கு வந்த அரசு பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் சிரமப்பட்டனர். மீண்டும் பேருந்து வசதிகோரி உசிலம்பட்டி பணிமனை முன்பு இன்று (ஜூன்.25) பெற்றோருடன் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்து சேவை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

Similar News