கண்மாயை நவீனப்படுத்த ஆய்வு

மதுரை உசிலம்பட்டி பகுதி கண்மாயை நவீனப்படுத்துவதற்கான ஆய்வு நடைபெற்றது;

Update: 2025-06-25 10:12 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் உசிலம்பட்டி கண்மாயை நவீன படுத்த தொடர் கோரிக்கை எழுந்து வந்த நிலையில் முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் உத்தரவின் பேரில் இந்த கண்மாயை நவீன படுத்தும் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சென்னை பாபா அணு ஆராய்ச்சி மைய அணு ஆராய்ச்சி விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையில் உசிலம்பட்டி நகராட்சி, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்களும் ஆய்வு செய்தனர்.

Similar News