திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி
பாஜகவிற்கு ஒரு அடிமை சாசனத்தை அதிமுக எழுதிக் கொடுத்துள்ளது. அதனுடைய நிகழ்வுகள் தான் நாம் இப்பொழுது பார்த்து வருகிறோம்- திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி.;
திண்டுக்கல் பயணியர் சுற்றுலா மாளிகையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் அவர் பேசியதாவது : மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக வரும் ஜூலை மாதம் ஆறாம் தேதி மதுரையில் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது. உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அரசியலில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். வக்பு வாரிய திருத்த சட்டம் 2025 ஐ திரும்பப் பெற வேண்டும். 15 சதவீத முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்கள் ஆனால் பாராளுமன்றம், சட்டமன்றம், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி ஆகியவற்றில் சதவீதத்திற்கு ஏற்றவாறு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. ஆகவே பிரதிநிதித்துவம் அதிகப்படுத்த கோரியும், நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நள்ளிரவு தாண்டிய பிறகு நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டம் 2025 என்பது வக்பு சொத்துக்களை கொள்ளையடிப்பதற்காக கபலீகரம் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் இந்த இரண்டு கோரிக்கைகளை முன்னிறுத்தி பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது. நிச்சயமாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் ஜனத்தொகை 7% . அதன்படி பார்த்தால் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 14 முஸ்லிம்கள் இருக்க வேண்டும். நாங்கள் எங்களுக்கு மட்டும் கேட்கவில்லை அனைத்து கட்சிகளுக்காகவும் திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும் சரி காங்கிரஸ் ஆக இருந்தாலும் சரி அல்லது எதிரணியிலே இருக்கும் அதிமுகவாக இருந்தாலும் சரி அவர்கள் தேர்தலிலே வாக்காளர்களின் இருக்கும்பொழுது முஸ்லிம்கள் பிரதிநிதி தத்துவம் குறைவாக இருப்பதை கவனத்தில் கொண்டு புதிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதுதான் பொதுவாக நாங்கள் வைக்கும் கோரிக்கை என பதில் அளித்தார். முஸ்லீம் கட்சிகள் தான் அதிகமாக இருப்பதாக ஒரு எண்ணம் தான் பொதுவாக உள்ளது. ஜனநாயக நாட்டில் நமது தேர்தல் ஆணையம் பதிவு செய்வது எளிது. அப்படி பதிவு செய்து நிறைய கட்சிகள் துவங்கி இருக்கிறார்கள். சில கட்சிகள் தங்களை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யாமலே தங்களை கட்சிகள் என சொல்லிக் கொண்டுள்ளன. மக்களின் அங்கீகாரம் மற்றும் செல்வாக்கு பெற்ற முதன்மையான கட்சியாக மனிதநேய மக்கள் கட்சி இருக்கின்றது. அதேபோல் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இதைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஆல்டோ பிளேடு என்பார்கள். அப்படி என்றால் பெரிய கட்சி செல்வாக்கு மிகுந்த கட்சி என யாரையும் குறிப்பிட முடியாது. முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை கூறிய புள்ளி விவரம் தவறானது தற்போது முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்து வருகிறது. அரசியலமைப்பை உடைத்தெரிவது தான் மத்திய அரசின் திட்டம். அதுதான் அண்ணாமலையின் உரையாக அமைந்திருக்கிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது நன்றாக உள்ளது. நடக்கக்கூடிய குற்றங்களை உடனடியாக கண்டறிந்து தண்டனை வழங்க கூடிய ஆட்சியாக உள்ளது என்பதுதான் உண்மை. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் இன மக்கள் என எல்லாரும் பல்வேறு அரசியல் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளார்கள். அதை அரசியல் ஆக்கிய மகத்தான பங்கு அண்ணாவிற்கு உரியது. அந்த வரலாற்றையே மாற்றுவதற்கு தான் பாஜக விரும்புகிறது. இந்தியாவின் வரலாற்றை மாற்ற நினைப்பார்கள் தமிழ்நாட்டின் வரலாற்றை ஒரு பங்களிப்பை இருட்டடிப்பு செய்வதற்காக அவர்கள் இது மாதிரி கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். வேதனையானது. அதிமுகவினர் மேடையில் இருந்தார்கள் சபை நாகரிகம் கருதி மேடையில் எதிர்க்கவில்லை என்றால், மேடையை விட்டு இறங்கிய அடுத்த தருணமே அறிக்கை வந்திருக்க வேண்டாமா. அண்ணாவின் உருவம் பொறித்த கொடியை பயன்படுத்தும் அதிமுகவினர் அண்ணா மற்றும் பெரியாரை கொச்சைப்படுத்தி மாநாட்டில் பேசுவதைப் பற்றி வாய் திறக்கவில்லை எனது சமூக ஊடகங்களில் பெரிய அளவில் சாதாரண மக்கள் விமர்சித்த பிறகு தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாய் திறக்கிறார் என்றால் எந்த அளவுக்கு கட்டுப்பட்டு கட்சியின் கொள்கைகளை அடகு வைத்து இருக்கிறார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. சாமானிய மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்த ஆட்சியாக இருக்கின்றது. உதாரணத்திற்கு, பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் கொடுப்பது என்பது பல்லாயிர வீடுகளுக்கு ஒளி ஏற்றி இருக்கிறது. மகளிர்க்கு அளிக்கப்படக்கூடிய அந்த உரிமை தொகை மகளிரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சாதாரண சாமானிய ஏழை எளிய மக்களுக்கு நன்மைகள் சென்று கொண்டிருக்க கூடிய ஒரு சூழலில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மிகவும் அபாரமான வெற்றி பெறும் மாற்று கருத்து இல்லை என்றார்.