திமுக மாவட்ட செயலாளர் கே. எஸ். மூர்த்தி பிறந்தநாள் விழா.

நாமக்கல் மேற்கு மாவட்டம்  திமுக செயலாளர் கே. எஸ். மூர்த்தி பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடிய தொண்டர்கள்.;

Update: 2025-06-25 13:22 GMT
பரமத்தி வேலூர், ஜூன்.25:  நாமக்கல் மேற்கு திமுக மாவட்ட  செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். மூர்த்தி பிறந்தநாள் விழா வேலூர் கட்சி அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வேலூர் பேரூர் கழக செயலாளர் முருகன் தலைமை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மகிழ் பிரபாகரன்,மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவலடி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கட்சி அலுவலகத்திற்கு வந்த மாவட்டச் செயலாளர் கே.எஸ். மூர்த்தி கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், பாண்டமங்கலம் பேரூர் கழக செயலாளர் முருகவேல், பேரூராட்சி தலைவர் சோமசுந்தரம் உட்பட பேரூர்,நகரம்,ஒன்றிய,கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News