மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு;
ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது சுகாதார நிலையத்தில் ஒரு நர்ஸ், ஒரு டாக்டர் கூட இல்லாமல் திறந்த நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் அனைவருக்கும் நோட்டீஸ் வழங்க உயர் அதிகாரிகளுக்கு போன் மூலம் உத்தரவிட்டார். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பு காணப்பட்டது.