ஆரணியில் பிள்ளைக்குளம் ஆக்கிரமிப்பு செய்து நடைபெற்ற பணியினை நிறுத்திய ஆரணி வட்டாட்சியர்.
ஆரணி தாதுசாயபு தெருவில் உள்ள பிள்ளைகுளத்தை அப்பகுதியினர் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவர் கட்டுவதை ஆரணி வட்டாட்சியர் போலீஸார் பாதுகாப்போடு சென்று தடுத்து நிறுத்தினார்.;
ஆரணி தாதுசாயபு தெருவில் உள்ள பிள்ளைகுளத்தை அப்பகுதியினர் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவர் கட்டுவதை ஆரணி வட்டாட்சியர் போலீஸார் பாதுகாப்போடு சென்று தடுத்து நிறுத்தினார். ஆரணி தாதுசாயபு தெருவில் உள்ள பிள்ளைகுளத்தை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இது மசூதி இடம் என கூறி சுற்றுச்சுவர் கட்டும் பணியினை துவக்கினர். இது குறித்து இந்து முன்னணி சார்பில் மாவட்டதலைவர் தாமு தலைமையில் ஆரணி கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். இது குறித்து விசாரணை செய்துமாறு கோட்டாட்சியர் உத்தரவிட்டதின்பேரில் ஆரணி வட்டாட்சியர் கௌரி, வருவாய்ஆய்வாளர் நித்யா மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று இருந்ததை நிறுத்தினர். மேலும் அங்கு அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லீம்கள் சென்று இது வக்ப்போர்டு இடம் என்று கூறினர். இதற்கு ஆரணி வட்டாட்சியர் இது குறித்த ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. மேலும் உங்களிடம் ஆவணம் இருந்தால் அதனை எடுத்துவாருங்கள். இதனை ஆய்வு செய்த பிறகு கட்டிடப்பணியை துவக்குங்கள். என கூறி பணியை நிறுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.