பிள்ளைகள் கண்முன்னே தாய் தூக்கிலிட்டு தற்கொலை

வத்தலக்குண்டு கணவாய் பட்டி காந்திநகர் பகுதியில் பிள்ளைகள் கண்முன்னே தாய் தூக்கிலிட்டு தற்கொலை கடன் கொடுத்தவர்கள் தகாத வார்த்தையில் திட்டியதால் மனம் உடைந்த பெண் தற்கொலை;

Update: 2025-06-25 19:41 GMT
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கணவாய் பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பிரசித்சந்திரன் ஹோட்டலில் சமையல் வேலை செய்து வருகிறார் இவருடைய மனைவி அஜித்ரா (27) மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார் இந்நிலையில் பிரசித் சந்திரன் குஜிலியம்பாறையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் அஜித்ரா மற்றும் அவர்கள் குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர் இன்று காலை அவர்களது வீட்டிற்கு வந்த இரண்டு பேர் வாங்கிய கடனை திருப்பி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர் அப்போது அவர்கள் கொடுத்த பணத்தை திருப்பி தர முடியாதா என அஜித்ராவை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது இதனால் மனமுடைந்து கதறி அழுத அஜித்ரா தன்னை அவமானப்படுத்திவர்கள் சென்ற சில நிமிடங்களில் வீட்டை உள்பக்கம் பூட்டி கொண்டு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார் பிள்ளைகள் இருவரும் தாயின் காலினை பிடித்து கொண்டு கதறிய நிலையில் பிள்ளைகளை உதறிவிட்டு மின்விசிறியில் தூக்கிலிட்டு கொண்டுள்ளார் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அஜித்ரா தூக்கில் பிணமாக கிடந்தார் இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த வத்தலக்குண்டு போலீசார் அஜித்ராவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அஜித்ராவில் மரணத்திற்கு காரணமானவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் கடன் பிரச்சனையில் அவமானம் தாங்காமல் மனம் உடைந்த பெண் தன் குழந்தைகள் கண் முன்னே தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News