கேரளா லாட்டரி விற்பனை செய்த வாலிபர் கைது
வத்தலகுண்டுவில் அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்த வாலிபர் கைது, ரூ.44 ஆயிரம், 2 செல்போன்கள், லாட்டரி சீட்டுகள் பறிமுதல்;
திண்டுக்கல் வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி தலைமையில் சார்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்லா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கணவாய்பட்டி ரோடு சின்னப்பள்ளிவாசல் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி (சிங்கம், குயில்) சீட்டுகளை விற்பனை செய்த காந்திநகர் பகுதியை சேர்ந்த பாண்டி மகன் சின்னத்துரை(38) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கேரளா லாட்டரி சீட்டுகள், ரூ.44 ஆயிரம் பணம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.