ஆசிட் ஏற்றி வந்த டேங்கர் லாரியில் ஓட்டை ஏற்பட்டு ஆசிட் கசிவு
திண்டுக்கல் அருகே ஆசிட் ஏற்றி வந்த டேங்கர் லாரியில் ஓட்டை ஏற்பட்டு ஆசிட் கசிவு;
திண்டுக்கல், மதுரை தேசிய நெடுஞ்சாலை பார்வதி கலைக்கல்லூரி அருகே தூத்துக்குடியில் இருந்து கரூர் நோக்கி ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஏற்றி வந்த லாரியின் டேங்கரில் ஓட்டை ஏற்பட்டு ஆசிட் கசிவு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் லாரி சாலையின் ஓரத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் நிறுத்தி வைத்து லாரியை குளிர்விக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.