ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
எரியோடு அருகே ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி;
திண்டுக்கல் எரியோடு அருகே கரூர் வழியாக செல்லும் ரயிலில் வேடசந்தூர், வள்ளிபட்டி, குறுவனுர் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் ராஜ்குமார்(30) இவர் கூலி தொழிலாளி, இவர் குடும்பப் பிரச்சினை காரணமாக அரவக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு செல்லாமல் தண்டவாளத்தின் அருகே அமர்ந்து மது அருந்திவிட்டு ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கேசவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.