திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் நீரூற்று போல் குடிநீர் பைப் உடைந்து தண்ணீர் வெளியேறுகின்றது. தற்பொழுது இந்த வெயில் காலத்தில் குடிநீர் இல்லாமல் மாவட்டத்தில் ஏராளமான பகுதி மக்கள் அவதி அடைந்து வரும் நிலையில் இவ்வாறு நீரூற்று போல் உடைந்து ஓடும் தண்ணீரைக் கண்டு பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.