நெல்லை மாநகர மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ரஸூல் மைதீன் தலைமையில் மேலப்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகின்ற ஜூலை 6ஆம் தேதி மதுரையில் நடைபெறும் பேரணியில் மக்களை திரட்டி செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ரியாசூர் ரஹ்மான் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.