ராமநாதபுரம் பசும்பொன் முத்துராமலிங்க நினைவிடத்தில் அஞ்சலி

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆதரவான ஆந்திர தமிழ் சங்க நிர்வாகிகள் அஞ்சலி;

Update: 2025-06-27 04:10 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆதரவான ஆந்திர தமிழ் சங்க நிர்வாகிகள் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து சாமி கும்பிட்டனர். மதுரையில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று அதில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொண்டு பேசும்போது முத்துராமலிங்க தேவரை முருகனின் அம்சமாக இருப்பதாக கூறியதால் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டு ஆந்திராவில் உள்ள தமிழ் சங்க தலைவர் ராம்குமார் மற்றும் செயலாளர் ஈஸ்வர தேவர் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் சாமி கும்பிட்டனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைவர் மற்றும் செயலாளர் பவன் கல்யாண் சனாதனத்திற்கு எதிராக இருந்து நேற்று மதுரை முருக பக்தர் மாநாட்டில் கலந்து கொண்டதால் ஆந்திராவில் இருந்து வந்து மாநாட்டில் கலந்து கொண்டதாகவும் முத்துராமலிங்க தேவரை பற்றி பேசியதால் அதற்கு நன்றி செலுத்தும் விதமாக தேவர் நினைவிடத்திற்கு வந்ததாக கூறினர்.

Similar News