பாதியாக குறைந்த பூக்களின் விலை

பாதியாக குறைந்த பூக்களின் விலை. விவசாயிகள் வேதனை!;

Update: 2025-06-27 11:34 GMT
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை உயர்வு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பூவின் வரத்து அதிகரித்ததால், பல்வேறு வகை பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக திண்டுக்கல் சந்தையில் சம்பங்கி ரூ.30, குல்லைப்பூ ரூ.150, மல்லிகை ரூ.400க்கு விற்பனையாகிறது. முந்தைய வாரங்களில் மல்லிகை பூ ரூ.700 வரை விற்பனையான நிலையில், தற்போது ரூ.400க்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று குல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்களும் ஏறத்தாழ பாதியில் விலை சரிவை சந்தித்துள்ளன. பூக்களின் விலை குறைவால், திருமண விழாக்கள், காயத்ரி ஹோமம், வீட்டு பூஜைகள், போன்ற நிகழ்வுகளுக்கு பூ வாங்க வந்த பொதுமக்கள் விலையை கேட்டு மகிழ்ந்தனர். அனைத்து பூக்களின் விலை குறைந்து இருந்ததால் சிறுவியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கிச் சென்றனர். பூக்கள் விலை சரிவால் கூலி கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Similar News