கடலூர்: காவல் துறையினர் உறுதிமொழி ஏற்பு
கடலூரில் காவல் துறையினர் உறுதிமொழி ஏற்றனர்.;
கடலூர் மாவட்டம் காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளாவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதியளிக்கிறேன் என உறுதிமொழி மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் தனி பிரிவு காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம். ஆயுதப்படை ஆய்வாளர் அருட்செல்வன், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.