விவசாயிகள் நிலத்து நீருக்கு வரியா, மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி போடும் பாஜக அரசைக் கண்டித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்.;
. விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கும் பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சிம்சன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர். நிலத்தடி நீரை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தனர். இதில் மாவட்ட செயலாளர் துரைராஜ் இயற்கை விவசாயி ராமலிங்கம், காவிரி டெல்டா பாசனதாரர் விவசாயிகள் சங்க தலைவர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.