பள்ளி மாணவர் ஏரியில் மூழ்கி பலி

பலி;

Update: 2025-06-29 03:17 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாதுார் கிராமத்தை சேர்ந்தவர் கருணாமூர்த்தி மகன் சூரிய பிரகாஷ், 17; மூளை வளர்ச்சி சற்று குன்றியவர். அதேபகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவர் ஏரியில் சடலமாக மிதப்பதாக மதியம் குடும்பத்திற்கு தகவல் கிடைத்தது. திருநாவலுார் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News