பைக்குங நேருக்கு நேர் மோதல் இருவர் பலி

மயிலாடுதுறை அருகே பைத்தியங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டசாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு இவர் சிசையில் உள்ளனர் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2025-06-29 08:31 GMT
மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் அருகே உள்ள வாளவராயன்குப்பம் கிராமத்தை சேர்ந்த கீர்த்திவாசன்(26). இவரது உறவினர் கடலூரைசேர்ந்த அஸ்வின்(23) என்பவரை பைக்கில் அழைத்துக் கொண்டு நள்ளிரவு மயிலாடுதுறையை நோக்கி சென்றுள்ளனர், , அந்த நேரத்தில் வாளவராயன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ்(21), தனுஷ்(22) ஆகியோர் பைக்கில் ஊர் திரும்பியுள்ளனர். இந்த இரண்டு வாகனங்களும் மங்கைநல்லூர் - கோமல் சாலை கம்பங்கொல்லை என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயடைந்தவர்களை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அஸ்வின்(23) உயிரிழந்தார். காயம் அடைந்த கீர்த்திவாசன், தனுஷ் ஆகியோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் உள்ளனர்.

Similar News