ஆரணி சூரியகுளம் அருகில் தவெக சார்பில் பல்வேறு நலதிட்ட உதவிகள்.
தவெக தலைவர் விஜய் பிறந்த நாள் முன்னிட்டு ஆரணி சூரியகுளம் அருகில் தவெக சார்பில் பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது;
ஆரணி, தவெக தலைவர் விஜய் பிறந்த நாள் முன்னிட்டு ஆரணி சூரியகுளம் அருகில் தவெக சார்பில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தவெக தலைவர் விஜய் பிறந்த நாள் முன்னிட்டு ஆரணி சூரியகுளம் அருகில் 10ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினர். மேலும் ஏழை மக்களுக்கு வேட்டி, சேலை வழங்குதல், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குல் என பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை சரிபார்ப்பு அணி தலைவர் எம்.ராஜேஷ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தவெக மாவட்டசெயலாளர் எம்.சத்யா கலந்துகொண்டு 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், ஏழை மக்களுக்கு இலவச வேட்டி, சேலையும், பொதுமக்களுக்கு அன்னதானம் ஆகியவற்றை வழங்கினார். மேலும் இதில் மாவட்டபொருளாளர் அசோக்குமார், மாவட்ட நிர்வாகி சத்தியராஜ், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் மாவட்ட நிர்வாகிகள் அஜய், சுதன், சக்தி, தினேஷ், ராகவன், அருண் நகர நிர்வாகிகள் ஹேம்நாத், பிரசாந்த், மதுக்குமார் தாமு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.