கரூர் திமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கரூர் திமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-06-29 13:44 GMT
கரூர் திமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கரூர் அறிவாலயத்தில் தளபதி கூட்ட அரங்கில் திமுக மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கூட்டத்தில் நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், சட்டத்துறை இணைச் செயலாளர் மணிராஜ் , எம்எல்ஏக்கள் மாணிக்கம் , இளங்கோ , சிவகாமசுந்தரி , கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முரளி உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுரைப்படி ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து இந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.செயல் திட்டங்கள் குறித்து மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி கட்சியினருக்கு விளக்கி கூறினார்.

Similar News