ஆத்தூர் -மனைவி கண் முன்னே கணவர் விபத்தில் உயிரிழப்பு.

ஆத்தூர் -மனைவி கண் முன்னே கணவர் விபத்தில் உயிரிழப்பு.;

Update: 2025-06-29 14:05 GMT
ஆத்தூர் -மனைவி கண் முன்னே கணவர் விபத்தில் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுக்கா ஆத்தூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி வயது 45.இவரது மனைவி சின்ன பொண்ணு வயது 40. இருவரும் ஜூன் 28ஆம் தேதி மதியம் ஒன்னே கால் மணி அளவில் ஈரோடு - கரூர் சாலையில் டூ வீலரில் சென்றனர். இவர்களது வாகனம் ஆத்தூர் அருள்நகர் பிரிவு அருகே வந்தபோது , அதே சாலையில் இவர்களை முந்தி சென்ற கரூர் மாவட்டம் , புலியூர் அரிஜன தெருவை சேர்ந்த பெரியசாமி வயது 51 என்பவர் ஓட்டி சென்ற வேன்,எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் திடீரென பிரேக் இட்டதால் , பின்னால் வந்த வேலுசாமியின் டூவீலர் பெரியசாமியின் வேன் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தனது மனைவி கண் முன்னே துடி துடித்து உயிரிழந்தார். சம்பவம் அறிந்த வேலுச்சாமியின் மகன் தனுஷ் வயது 21 அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் , உயிரிழந்த வேலுச்சாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சாலை விதிகளுக்கு புறம்பாக வேனை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பெரியசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News