வத்தலக்குண்டு புனித தோமையார் ஆலய திருவிழா
வத்தலக்குண்டு புனித தோமையார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது;
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு புனித தோமையார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. புனித தோமையார் உருவம் பொறிக்கப்பட்ட கொடியினை கிறிஸ்தவ பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் ஆலய வளாகத்தில் இருந்த கொடி கம்பத்தில் கத்தோலிக்க திருச்சபை மதுரை உயர்மறை மாவட்ட பொருளாளர் அருட்தந்தை அல்வரஸ் செபாஸ்டின் கொடியினை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வர்டு, அருட்தந்தை பால்ராஜ் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான கிருஸ்துவ பொதுமக்கள் பங்கேற்றனர்.