ஆதார் எண்ணை இணைத்தோருக்கு மட்டுமே தட்கல் டிக்கெட்
நாளை முதல் ஆதார் எண்ணை இணைத்தோருக்கு மட்டுமே தட்கல் டிக்கெட்: ரயில்வே தகவல்;
ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் ஆதார் எண்ணை இணைத்தோர் மட்டுமே நாளை முதல் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே அறிவித்துள்ளது. ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் கவுன்டர்கள் மூலம் மட்டுமே தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். ஆன்லைன் தட்கல் டிக்கெட் முன்பதிவுகளில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவர ரயில்வே புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. போலி கணக்குகள் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவை தடுக்கும் வகையில் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.கவுன்டரில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கும் ஆதார் மூலம் ஓடிபி நடைமுறையை ஜூலை 15 முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தட்கல் டிக்கெட் சில நிமிடங்களிலேயே விற்று தீர்வதை தடுக்கும் வகையில் ஆதார் எண் இணைப்பு கட்டாயம்.