கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-06-30 08:29 GMT
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வாரம்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்தும்,தனிப்பட்ட முறையில் உள்ள குறைகள் குறித்து மனுக்களாக தயாரித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேலுவிடம் வழங்கினர். மனுக்களை பரிசீலித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அது குறித்து விளக்கம் கேட்டு மனு அளித்தவருக்கு பதில் அளித்தனர். மனுவில் குறிப்பிட்டுள்ள குறைகள் குறித்த ஆதாரங்களுடன் சமர்ப்பித்த குறிப்பிட்ட நபர்களுக்கு உடனடியாக தீர்வுகளும் வழங்கப்பட்டது.

Similar News