ரயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள். ரயில் சேவையில் மாற்றம்.சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் அறிவிப்பு.

ரயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள். ரயில் சேவையில் மாற்றம்.சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் அறிவிப்பு.;

Update: 2025-06-30 10:01 GMT
ரயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள். ரயில் சேவையில் மாற்றம்.சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் அறிவிப்பு. கரூர் வழியாக இயக்கப்படும் ரயில் எண் 16322 கோயம்புத்தூர்- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் ஜூலை 1 மட்டும் 2ம் தேதிகளில் மாற்றம்குறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் விடுத்துள்ள அறிவிப்பில். திண்டுக்கல் - மதுரை ரயில் வழித்தடத்தில் வாடிப்பட்டி - சோழவந்தான் ரயில் நிலையங்கள் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் , காலை 8 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில் எண் 16322 கோயமுத்தூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 1- மற்றும் 2-ம் தேதிகளில் திண்டுக்கல்லில் நிறுத்தப்படும் எனவும், அந்த நாட்களில் திண்டுக்கல் சந்திப்பு முதல் நாகர்கோவில் சந்திப்பு வரை இயக்கப்படாது என தெரிவித்துள்ளார். மேலும் ஜூலை 1 அன்று திண்டுக்கல்லில் இருந்து நாகர்கோவிலுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் , இது மதியம் 3:45 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்படும் இந்த ரயில் திண்டுக்கல் நாகர்கோவில் இடையே வழக்கமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் அதே நிறுத்தங்களோடு இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News