நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்ற பொழுது ஒரு சிலர் மதமாற்றம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்துள்ளனர். இதனை கண்ட இந்து முன்னணியினர் மதமாற்றம் செய்வோரை கைது செய்ய வேண்டும் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மதமாற்ற துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.