காவல் நிலையத்தில் மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி
முன்னீர்பள்ளம் காவல்நிலையம்;
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் இன்று காவல் ஆளிநர்களின் குழந்தைகள் கடந்த கல்வியாண்டில் 10,12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிக மதிப்பெண் பெற்ற பிரேமா, ஸ்ரீயா ஆகியோருக்கு கேடயம்,புத்தகம் வழங்கி காவல் ஆய்வாளர் வேல் ராஜ் வாழ்த்து தெரிவித்தார். இதில் காவலர்கள் உடன் இருந்தனர்.