மேட்டூரில் திறக்கப்பட்ட உபரி நீரால் மாயனூர் கதவனைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.
மேட்டூரில் திறக்கப்பட்ட உபரி நீரால் மாயனூர் கதவனைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.;
மேட்டூரில் திறக்கப்பட்ட உபரி நீரால் மாயனூர் கதவனைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு. கர்நாடகாவில் கொட்டி தீர்த்த மழையால் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் திறக்கும் அளவுக்கு சென்றது. மேட்டூரில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணை கொள்ளளவான 120 அடியை எட்டியதுபோக உபரியாக 58 ஆயிரம் கன அடி நீரை காவிரி ஆற்றில் திறந்து விட்டனர். இதன் தொடர்ச்சியாக கரூரில் உள்ள மாயனூர் காவிரி ஆற்றில் கதவனைக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி 31,169 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. அதேசமயம் காவிரி ஆற்றில் 30 ஆயிரத்து 349 கன அடி நீரும்,3- பாசன வாய்க்கால்களில் 820 கன அடி நீரும் திறக்கப்பட்டது. காவிரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மாயனூர் கதவனைக்கு அதிகப்படியாக நீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.