குடிநீர் தொட்டியில் மலம் கழித்து அசுத்தம் செய்த மர்ம நபர்கள்

மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கழித்து அசுத்தம் செய்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு;

Update: 2025-06-30 12:22 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மூவேந்தர் புலிப்படை சார்பில் மனு அளிக்கப்பட்டது அதில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா நல்லமனார் கோட்டை ஊராட்சி தொட்டனம்பட்டி கிழக்குத் தெருவில், ஊராட்சி சார்பில், மேல்நிலைத் நீர் தொட்டி பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது. பயன்பாட்டுக்கு வரக்கூடிய நிலையில் உள்ள தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கழித்து அசுத்தம் செய்துள்ளனர். அந்த மர்ம நபர்கள் மீது ஏற்கனவே எரியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை தொட்டியில் மலம் கழித்த மர்ம நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

Similar News