மாணவிகளுக்கான ஒரு வார அறிமுகப் பயிற்சி முகாம்

திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான ஒரு வார அறிமுகப் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து, மாணவிகளுடன் கலந்துரையாடினார்;

Update: 2025-06-30 13:54 GMT
திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான ஒரு வார அறிமுகப் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தொடங்கி வைத்து, மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பள்ளிக் கல்வியை முடித்த மாணவ, மாணவிகள் அனைவரையும் ஏதாவது ஒரு உயர்கல்வியில் சேர்ந்து படிக்கின்ற வாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்றார். கல்லூரி வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. கல்லூரி என்பது கல்வியை மட்டுமின்றி வாழ்க்கை பாடத்தையும் நமக்கு கற்பிக்கிறது. இந்த கல்லூரி காலத்தில் நல்ல விஷயங்களை அறிந்து நமது வாழ்க்கையில் பயன்படுத்தி ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தீய விஷயங்களை அறிந்து அவற்றை ஒதுக்கிட வேண்டும். முன்னதாக முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு ரோஜா பூ மற்றும் இனிப்பு வழங்கி கல்லூரி முதல்வர் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் லட்சுமி, இணைப்பேராசிரியர்கள் நாகநந்தினி, ராஜேஸ்வரி, பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News