மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை;
திண்டுக்கல் மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் செவ்வாய் கிழமைகளில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டு எண்: 210-லும், பிரதி வாரம் வெள்ளிக் கிழமை தோரும் பழனி அரசு மருத்துவமனையிலும் மற்றும் பிரதி மாதம் கடைசி வியாழக்கிழமை தோரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான முகாம்கள் நடைபெறவுள்ளன.