நவ்வலடியில் உறுப்பினர் சேர்க்கை பயிற்சி வகுப்பு
ராதாபுரம் தெற்கு ஒன்றிய திமுக;
திருநெல்வேலி மாவட்டம் நவ்வலடி காமராஜர் கூட்டரங்கில் நேற்று மாலை பாக முகவர்களுக்கான மக்களுடன் ஸ்டாலின் செயலி வழி குடும்ப உறுப்பினர் சேர்க்கை பயிற்சி வகுப்பு ராதாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏரிக் ஜூடு பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சரவணன் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.