குழந்தையை தூக்கி விளையாடிய இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த இரண்டு பேர் கைது

திருமானூர் அருகே குழந்தையை தூக்கி விளையாடிய இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-07-01 13:24 GMT
அரியலூர், ஜூலை.1- திருமானூர் அருகே குழந்தையை தூக்கி விளையாடியதால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே திங்கள்கிழமை இரவு இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை,மகனைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமானூர் அருகேயுள்ள கண்டிராதீர்த்தம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித்(30). திங்கள்கிழமை இரவு இவர், அங்குள்ள பெட்டிக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு இவருக்கும், பிரதானச் சாலையைச் சேர்ந்த பெட்டிக் கடை உரிமையாளரான சி.பாலகிருஷ்ண(55), இவரது மகன் பாலாஜி(30) ஆகியோருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன்,பாலாஜி ஆகிய இருவரும் சேர்ந்து ரஞ்சித்தை கத்தியால் குத்தியுள்ளனர். பலத்த காயமடைந்த ரஞ்சித், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதுகுறித்து திருமானூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து பாலகிருஷ்ணன், இவரது மகன் பாலாஜி ஆகியோரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News