மூங்கில்குடியில் சாலை அமைக்க தர பொதுமக்கள் கோரிக்கை
நன்னிலம் அருகே மூங்கில்குடி கிராமத்தில் மேலத்தெரு பகுதியில் புதிதாக சாலை கேட்டு மனு அளித்த கிராம மக்கள்;
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே மூங்கில்குடி மேல தெரு பகுதியில் சுமார் 20 லிருந்து 30 குடும்பத்திற்கு மேல் வசித்து வருகின்றனர். அப்பகுதிக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் வயல் வரப்பில்தான் சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதியிருந்து பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த வரப்பையே போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.. மழைக்காலங்களில் அந்த வழியாக செல்வதற்கு பள்ளிக்குச் செல்ல மாணவ மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ சந்துக்களால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்.. மேலும் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் சிரமமாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை அடைகின்றனர். மேலும் இறந்தவர்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வது கூட சாலை வசதி இல்லாமல் வயல் வரப்பிலேயே கொண்டு செல்ல வேண்டி உளளதாக வேதனை தெரிவித்தனர். நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லாத நிலையில் சாலை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.