நெல் கிடங்குகளுக்கு லாரி மூலம் இயக்கம் செய்யப்படும் நெல் மூட்டைகள்
நீடாமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்குறிந்த நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.;
திருவாரூர் மாவட்டம் முழுவதும் தற்போது கோடை குருவை அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அருவடை செய்த நெல்லை விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த 10 தினங்களாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் நெல் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படாமல் கொள்முதல் நிலையங்களிலேயே அடுக்கி வைக்கப்பட்டது. இதனால் தினம்தோறும் விவசாயிகள் கொண்டு வரும் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.தற்போது பருவம் தவறி பெய்த மழையால் கொள்முதல் செய்வதற்காக கொண்டுவந்த நெல் முளைத்து விடுமோ என விவசாயிகள் அச்சமடைந்தனர். இந்நிலையில் இன்று முதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் இயக்கம் செய்யப்பட்டு வருகிறது.குறிப்பாக நீடாமங்கலம் அருகே பாமணி,செருமங்கலம் கானூர்அன்னவாசல், உள்ளிட்ட பகுதிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றினர்.இந்த மூட்டைகள் மன்னார்குடி அருகே கீழநத்தம் கிராமத்தில் உள்ள அரசு நெல் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. கடந்த 10 தினங்களாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியிருந்த நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.