கம்பம் நோக்கி சென்ற தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனம் மற்றும் பேருந்து தீ பற்றி எரியத் தொடங்கியது - பயணிகள் அலறி அடித்து ஓட்டம்

விபத்து;

Update: 2025-07-02 06:42 GMT
மதுரையில் இருந்து கம்பம் நோக்கி செல்லும் தனியார் பேருந்து சுமார் 50 பயணிகளுடன் இன்று காலை தேனி வீரபாண்டி அருகே புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது அப்போது எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க இருசக்கர வாகனத்தை திருப்பிய போது நிலை தடுமாறி தனியார் பேருந்து மீது மோதி தூக்கி வீசப்பட்டார் தனியார் பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் சிறிது நேரம் இழுத்துச் செல்லப்பட்டு நின்றது, பேருந்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டதால் இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோல் மூலம் தீப்பற்றி எறிய தொடங்கி பேருந்தின் முன்பக்க டயர்களிலும் தீப்பிடிக்க தொடங்கியது இதனை அடுத்து பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் அலறியடித்த படியே பேருந்தில் இருந்து கீழே இறங்கினார் தொடர்ந்து தீ மல மலவென எரிய தொடங்கியதும் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பொதுமக்களின் உதவியுடன் பேருந்தில் இருந்த தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் இதனை அடுத்து போடியில் இருந்து தீயணைப்பு துறை வரவழைக்கப்பட்டு பற்றி எழுந்த தீயினை முழுவதுமாக அணைத்தனர் இதில் இருசக்கர வாகனம் தீயில் கருகி முற்றிலும் பேதம் அடைந்தது முன்பக்க சக்கரம் முழுவதும் தீயில் எரிந்து சேதம் ஆகியது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை காயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் தீ பற்றி எரியத் தொடங்கியதும் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் எந்தவித உயிரிழப்பும் இன்றி அதிர்ஷ்டம் அனைவரும் உயிர் தப்பினர் காலை நேரத்தில் இந்த விபத்து சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் இதுபோன்று தனியார் பேருந்தும் இருசக்கர வாகனம் மோதியதில் பேருந்து தீப்பற்றி எரிந்து ஒருவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Similar News