நெல்லை மாநகர 27வது வட்ட திமுக மூத்த முன்னோடி மீரானை இன்று (ஜூலை 2) நெல்லை மாநகர மேற்கு திமுக பொறுப்பாளர் சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் நாளை நடைபெற உள்ள உறுப்பினர் சேர்க்கை பற்றி ஆலோசனை பெற்றார். இந்த நிகழ்வின்போது மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வா, 27வது வட்ட நிர்வாகிகள் சுமதி மணி, கோமு, மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.