கரூர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
கரூர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் எம்எல்ஏக்கள் இளங்கோ , சிவகாமசுந்தரி , கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் , அரசு துறை அதிகாரிகள் , தூய்மை பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகளை வழங்கியும் ,ரூபாய் 5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.