ராமானுர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். முதியவர் படுகாயம்.

ராமானுர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். முதியவர் படுகாயம்.;

Update: 2025-07-02 13:11 GMT
ராமானுர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் ராமானுரைச் சேர்ந்தவர் பெருமாள் வயது 74. இவர் நேற்று முன் தினம் இரவு 8:30 மணி அளவில் கொளந்தானூரிலிருந்து பசுபதிபாளையம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் ராமானுர் மந்தை அருகே வந்த போது, எதிர் திசையில் பசுபதிபாளையம் காமராஜ் நகர் ஃபர்ஸ்ட் கிராஸ் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் மகன் 16 வயது சிறுவன் ஓட்டி வந்த டூ வீலர் , பெருமாள் ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் பெருமாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்து பெருமாளின் மகன் தங்கவேல் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Similar News