லாரி மோதி பள்ளி மாணவர் உயிரிழப்பு
மன்னார்குடியில் லாரி மோதி எட்டாம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்தில் உயிரிழப்பு தந்தை படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி;
மன்னார்குடி நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகணேஷ். இவருடைய மகன் அமரேஷ் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை மகனை பள்ளியில் விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் தந்தை அழைத்துச் சென்ற பொழுது மன்னார்குடி ருக்மணி பாளையம் சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதி மாணவன் கீழே விழுந்ததில் லாரியில் பின்பக்க சக்கரம் ஏரி சம்பவ இடத்திலேயே எட்டாம் வகுப்பு மாணவன் அமரேஷ் உயிரிழந்தார். தந்தை பலத்த காயத்துடன் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்து மன்னார்குடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்