மன்னர்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கிய தெப்ப திருவிழா
திருவாருர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் ஆணி தெப்ப திருவிழாவையொட்டி கொடியேற்ற விழா நடைபெற்றது.;
மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோவில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் நடைபெறும் தெப்போற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி கொடிமரம் எதிரே எழுந்தருளினார்.பின்னர் கருடக்கொடி பள்ளத்தில் வைத்து கோவிலில் நான்கு வீதிகள் வழியாக எடுத்துவரப்பட்டது.தொடர்ந்து மலர்களால் அலங்காரிக்கப்பட்ட கருட கொடிக்கு தீட்சிதர்கள் அடுக்கு தீபம் காண்பித்து புனித நீர் கொண்டு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் வேத மந்திரங்கள் ஓதி தீட்சிதர்கள் கருட கொடியேற்றி வைத்தனர். இன்று தொடங்கி பத்து நாட்கள் ராஜகோபால சாமி வைரமுடி சேவை,பரமபதநாதன், கண்ணன அவதாரம் என பல்வேறு அலங்காரதகளில் இரவு வீதி உலா நடைபெற உள்ளது. சுமார் 23 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய குளமான ஹரித்ரா நதி தெப்பக் குளத்தில் இம்மாதம் 10 ஆம் தேதி இரவு ருக்மணி சத்ய பாமாவுடன் கிருஷ்ணா அலங்காரத்தில் ராஜகோபால சாமி தெப்பத்தில் எழுந்தாருக்கும் விழா நடைபெற உள்ளது.